சனி, 2 ஜூலை, 2011

ஜின்ஜினிக்கான் சின்னக்கிளி, சிரிக்கும் பச்சை கிளி..

ஜின்ஜினிக்கான் சின்னக்கிளி, சிரிக்கும் பச்சை கிளி...( ராஜபார்ட் ரங்கதுரை ), ஜானே கஹாங் கையே வோ தின் ( மேரா நாம் ஜோக்கர் ) உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞானத் தங்கமே ( அபூர்வ சகோதரர்கள் ) போன்ற பாடல்களுக்கு இடையே ஒரு ஒற்றுமை உண்டு. எல்லாமே சர்க்கஸ் கோமாளிகளாக வேடம் தரித்த கதாநாயகர்கள் பாடுபவை.

கோமாளிக் குல்லா, பார்க்கவே வேடிக்கையாக இருக்கும். இதில் பல தினுசுகள் உண்டு. பொதுவாக ஒரு கூம்பு வடிவம். உச்சியில் எலுமிச்சைப் பழம் போல் ஒரு கோளம். கோமாளி தலையை ஆட்டும் பொழுதெல்லாம் அதுவும் சேர்ந்து ஆடும். பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும்

நாம் பல சமயங்களில் பயன்படுத்தும் " புல் ஸ்கேப் " பேப்பர் என்னும் பெயரின் மூல வித்து இந்தக் குல்லாய்தான் !

சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, 8.5 X 13.5 cm இந்த அளவிற்குக் காகிதம் தயாரிக்கப்பட்டது. அதை உற்பத்தி செய்த நிறுவனம் தனது இலச்சினையாகிய கோமாளிக் குல்லாவை நீர்க்கோட்டு வடிவமாக ( water mark - ரூபாயத் தாளில் காந்தி உருவமும் அசோகச் சின்னமும் வெள்ளைக் கோடுகளாகத் தெரியுமே.. அதுபோல ) அச்சிட்டது. கோமாளிக் குல்லாவை Fool's Cap என்று சொல்வார்கள். அதனால் அந்தக் காகித்துக்கும் foolscap paper என்றே பெயர் நிலைத்தது.

அந்தக் காலக் கட்டத்தில் மக்களைவையின் ( parliament ) காகிதங்களில் அரசு முத்திரை, ( Royal coat of arms ) நீர்க்கோட்டு வடிவமாக இருந்தது.

ISO என்னும் உலகத் தர நிர்ணய அமைப்பு, A, B & C என்னும் மூன்று வகைகளில் பத்து அளவுகளில் காகிதங்களின் அளவுத் தர அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில் A ரகத்தின் 5ஆம் நிலையில் உள்ளதுதான் நாம் பெரும்பாலும் பயன்படுத்தும் A 4

கருத்துகள் இல்லை: