ரசித்ததும் புசித்ததும்
உயிர் பிரிந்த பின் சத்யவானின் உடல் கீழே விழுந்து கிடக்கிறது. அருகே கண்ணீரும் கம்பலையுமாக சாவித்திரி அமர்ந்திருக்கிறாள். பாசக்கயிறோடு எமன்.
" எனக்கு கணவனுக்கு உயிர் பிச்சை தாருங்கள் " என்று வேண்டுகிறாள். எமனும் உடனே " தந்தேன் " என்று கூறிவிட்டுப் போய் விடுகிறான். சத்யவானும் உயிர்த்து எழுகிறான்.
மூன்று மணி நேரம் நடக்க வேண்டிய நாடகம் ஒரு மணி நேரத்திலேயே எந்த விறுவிறுப்பும் இல்லாமல் முடிந்து விடுகிறது. சாவித்திரிக்கும் எமதர்மராஜனுக்கும் இடையே நடைபெறும் வாக்குவாதம்தானே கதையின் சிறப்பும் சாரமும் ! " தந்தேன் " என்று உடனே சொல்லிவிட்ட காரணத்தால், உப்பு சப்பு இல்லாமல் போய் விட்டது. ரசிகர்கள் கோபத்தோடு கலைந்து போகிறார்கள்.
நாடகக் கம்பெனியின் முதலாளி அம்மா முதல் முறுக்கு விற்பவன் வரை எல்லோரும் எமதர்மன் வேடமிட்ட நடிகரைத் திட்டித் தீர்த்தார்கள். சிலர் அடிக்கவும் செய்தார்கள்.
நடிகரோ, " என்னை எவ்வளவு வேண்டுமானாலும் அடியுங்கள். ஒரு பெண் மாங்கல்யப் பிச்சை கேட்கும் பொழுது மாட்டேன்னு சொல்ல எனக்கு மனசு வரல " என்று வெகுளியாகப் பதில் சொன்னார். எல்லோரும் சிரித்து விட்டனர்.
முதலாளி அம்மாளோ, " என்னையே சிரிக்க வெச்சுட்டியே ! பின்னாளில் நீ பெரிய நடிகனாக வருவாய் ! " என்று வாழ்த்தினார்கள்.
அடி வாங்கிய நடிகர், சென்னை வாணி மஹால் அருகில், உலராத சிரிப்பை உதடுகளில் தாங்கி, சிலையாக நிற்கும் கலைவாணர்தான்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக