வியாழன், 7 ஜூலை, 2011

Blogger & Picasa சேவைகளின் பெயரை மாற்றுகிறது கூகுள்!


கூகுள் நிறுவனம் தனது பிரதான இரண்டு சேவைகளின் பெயர்களை மாற்றம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வலைப்பதிவர்களுக்கான Blogger சேவை மற்றும் புகைப்படம் சம்பந்தமான  Picasa மென்பொருள் சேவைகளின் பெயரையே இவ்வாறு மாற்றவுள்ளது. 

Blogger நம்மில் பலர் நன்கறிந்த இலவச சேவையாகும். 

Picasa என்பது பரவலாகப் பயன்படும் புகைப்படம் சம்பந்தமான ஒரு மென்பொருள் ஆகும். 

இதனை ஒரு புகைப்படத் தொகுப்பு ஏடாகவும் பயன்படுத்தலாம். 

கூகுள் கணக்கு வைத்திருக்கும் எவரும் இதனைப் பயன்படுத்தலாம். 

இதன் மூலம் நாம் இணையத்தில் புகைப்படங்களை சேமிக்கவும், தொகுக்கவும், பகிர்ந்துகொள்ளவும், பதிவேற்றவும் முடியும். 

நேரடியாக இணையத்தின் ஊடாகவே பயன்படுத்தும் வசதியும் உள்ளது. 

இந்நிலையில் கூகுள் தனது இரண்டு பிரதான சேவைகளின் பெயர்களை மாற்றும் செய்தியானது அது தனது சமூகவலையமைப்பான 'கூகுள் +' இன் அறிவிப்புக்குப் பின்னரே வெளியாகியுள்ளது. 

அதன்படி Blogger சேவையானது Google Blogs எனவும் Picasa சேவையானது Google Photos எனவும் அழைக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது. 

கூகுள் இதற்கு முன்னரும் தனது சேவைகளின் பெயரை மாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

புதன், 6 ஜூலை, 2011

ஏன் எனக்கு மட்டும் இப்படி ஆகுது??????

ஏன் எனக்கு மட்டும் இப்படி ஆகுது என்று தோன்ற வைக்கும் சம்பவம்
எல்லாருக்குமே நடந்திருக்கும். எப்போது நினைத்தாலும் கடுப்பை
ஏற்றும், அப்படிப்பட்ட, எனக்கு நடந்த (அடிக்கடி), இப்போது நினைவில்
 இருப்பவை சில (பல நடக்கும்..இங்கு சில மட்டும்)

                        


கக்கூஸில் இருக்கும் போது, அனைவரும் கங்கனம் கட்டிக் கொண்டு




 கால் பண்ணுவது.. (இவ்ளோ நேரம் சும்மா தான இருந்தேன்.. அப்போ
 பண்ண வேண்டீதான?). அப்புறம், ஏண்டா எப்போ ஃபோன் பன்னாலும்
 எடுக்க மாட்டிங்கற? என்று திட்டுவது..
எங்கு சென்றாலும், நான் இருக்கும் இடத்திற்கு, 1 கி.மீ சுற்றளவில்,
 பெண்களின் சுவடே இல்லாமல் இருப்பது (நீ ஒரு ராசி கெட்டவன், எங்க
 கூட வராத என்று திட்ட துவங்கி விட்டார்கள் சக சிடிசன்ஸ். லேடீஸ்
 ஸ்பெஷல் பஸ்ஸில் டிரைவராக போய் விடாதே.. கலெக்ஷனே ஆகாது
 என்று கிண்டல் வேறு)
கழுத்தில் கத்தி இருக்கும் போது முதுகில் பயங்கரமாக அரிப்பது (ரவுடி
 எல்லாம் இல்ல.. சலூன் கடையில சொன்னேன்)
                                 



மிகவும் எதிர் பார்த்து காத்திருக்கும் கிரிக்கெட் தொடர். ஆவலோடு அந்த
 நேரத்திற்கு போட்டால், தூர்தர்ஷனில் ஒரு சேட்டு ஷெனாய் வாசித்து
கொண்டு இருப்பார் (இது சின்ன வயசில்.. அடிக்கடி நடக்கும் ஏன் எனக்கு
மட்டும் இப்பிடி சொல்லுங்க

செவ்வாய், 5 ஜூலை, 2011

அமிரகத்தில் முதல் முறையாக 24 மணிநேர 89.5Fm வானொலி நிலையம்


எல்லோருக்கும் என் இனிய வணக்கம் நம்ம அமிரகத்தில் முதல் முறையாக 24 மணிநேர 89.5Fm வானொலி நிலையம்  மனதுக்கு இதமாக இசை மழை பொழிகின்றது மனதுக்கு இதமான தமிழ் மொழி கேட்கும் போது இந்த இம்சையான வெயில் ௯ட இதமாய் இருக்கிறது 

                  காலையில் இருந்து மாலை வரை இடையில் நியூஸ் ,சிந்தனை ,கருத்துக்கள்,நகைச்சுவை,விளையாட்டு, ஆகிய எத்தனையோ நிகழ்ச்சிகள் அப்பப்பா சொல்ல இயலாது அவ்வளவு  நல்ல புரோகிறாம்

                                                     

இன்று போல் என்றும் மாறாமல் மறவாமல் எங்களுக்கு நீங்க தொடர்து நிகழ்சிகள் வழங்க வேண்டும்.
                                           
                                                                                         மணிவண்ணன் 

பேஸ்புக் வீடியோ செட்டிங் புதனன்று வெளியீடு



சமூகவலையமைப்பான 'பேஸ்புக்' எதிர்வரும் புதன்கிழமையன்று வீடியோ செட்டிங் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஸ்கைப் நிறுவனத்துடன் இணைந்தே பேஸ்புக் இச்சேவையை அறிமுகம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது

பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஷூக்கர் பேர்க் அண்மையில் தனது சமூகவலையமைப்பு அற்புதமான சேவை ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்திருந்தார்.

அவரது கருத்து அச்சேவை தொடர்பில் பாரிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருந்த நிலையிலேயே இத்தகவல் கசிந்துள்ளது.

'பேஸ்புக்' தற்போது சுமார் 750 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளதுடன், 'ஸ்கைப் ' 170 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளது.

'ஸ்கைப்'பை மைக்ரோசொப்ட் நிறுவனம் 8.5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேமாதம் கொள்வனவு செய்திருந்தது.

இதேவேளை கூகுள் நிறுவனம் அண்மையில் 'கூகுள் +' என்ற சமூகவலையமைப்பு ஒன்றினை அறிமுகப்படுத்தியது. 

*** முதலிரவில் முள்ளாய்க் குத்தும் முதல் காதல் ***


இடம் மாறி
மனம் மாறி
விளம்பரப் பலகையான கௌரவத்துக்காய்
விரல் நீட்டி
கலங்கிய மனதோடு ,
கலக்க மில்லா கண்களோடு....

இதமான, இதயமான, இதழான காதலனை
மார்புக்குள் மறைத்து
மாரப்புச் சேலையுடன்
மணந்து கொண்டேன்.

வேகமாய் ஓடும் கடிகாரங்கள்
இரவினை அழைக்க
வெந்து துடித்தது உயிர்.
குமுறி அழுத்தது மனம்.
சிரிப்பை மட்டும் முகத்தில் காட்டி
குனிந்த படி நான்...

பால் செம்பு ஏந்திய கரங்கள்
நடுக்கத்தோடு கால்கள்
நடமாடும் பிண‌மாகனேன் நான்...

தொட்டில் கட்ட இடம் பார்த்து
கட்டியவன் கட்டிலில்
குலுங்கும் உடலோடு
விடியாத நிலவானேன்

தலை தடவி அணையத்தபடி
இதலோடு இதலுரச
பதி ஜீவன் துடித்தழுதது...
இறுக மூடிய கண்கள்
வெறுப்பூட்டிய படி உதடு
அன்பாய் கொடுத்த முத்தம்
நெருந்தி முள்ளாய்க் குத்தியது.

மறக்க முடியாமல் தவிக்கின்ற‌து
என் முதல் முத்தம்
மனம் திறந்து அழைக்கின்றது
மாலையிட்டவன் சத்தம்.

பெண்மையை உறுதி செய்ய
வெள்ளை விரித்த மெத்தையில்
மல்லிகைப் பூ மாலை
மெதுவாக மெதுவாக உதிர
வேலி முள்ளாய் குத்தியது
முதல் காதல்.

அடைக்கப் பட்ட அறையில்
அணைக்கப் பட்ட விளக்கு
பின்னப் பட்ட கால்கள்
சுரண்டும் விரல்கள்
அங்கம் மேவும் கரங்கள்
அதுவும் சொன்னது
முதல் காதல்

ஆடைகள் நீங்க
வெட்கம் துறந்தேன்
கன்னியின் தன்மை
தானும் இழந்தேன்.
முதல் காதலும்
முதல் முத்தமும்
தீயில் இட்டு புரட்டி எடுத்தது என்னை...

மனம் ஒருத்தனுக்கு
உடல் ஒருத்தனுக்கு
மறக்க முடியாத காதலோடு
உயிர் மட்டும்...

நொடிக்கு நொடி குத்துகின்றது
என் கண்களில்
வயதான வாலிபனை
வாழ்க்கைப் பட்டுப் போனதற்கு
கௌரவ மேய்ச்சலில் கட்டிய தாலி
எனக்கும் வேலியானது....

விடிந்த இரவில் நீண்ட தூக்கம்
வெளிப் படஉத்தியது இரத்த ஓட்டம்
முள்ளின் மேலே முகுத்தப் படுக்கை
முதுகைத் தடவும் முதல் காதல்
மறக்க முடியாமல் தினமும் சாதல்
புழுங்கும் மனதோடு தொடருது என் வாழ்க்கை...

திங்கள், 4 ஜூலை, 2011

பத்மநாப சுவாமி கோவிலில் கிடைத்த 90 ஆயிரம் கோடி ரூபாய் பொக்கிஷம்! பாதுகாப்பது எப்படி? எழுந்தது புது பிரச்னை



திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவிலில், விலை மதிப்பிட முடியாத, காலத்தால் பழமையான பொருட்கள், மூன்று அறைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பே, 90 ஆயிரம் கோடி ரூபாய். இதுவரை கண்டெடுக்கப்பட்ட பழமையான பொருட்கள், கோவில் வசமே இருக்க வேண்டும் என வரலாற்று அறிஞர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பொக்கிஷத்தை எப்படிஇனி பாதுகாப்பது என அவர்கள் கவலை தெரிவித்தனர். பத்மநாப சுவாமி கோவில், தற்போது திருவிதாங்கூர் அரச குடும்பத்திடம் உள்ளது. கோவில் நிர்வாகத்தில் குளறுபடிகள் இருப்பதால், இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என டி.பி.சுந்தரராஜன் என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு வழக்கு தொடுத்தார்.இவ்வழக்கின் எதிரொலியாக, கோவிலின் ஆறு பாதாள அறைகளை திறந்து பரிசோதிக்கும்படி, ஏழு பேர் கொண்ட குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட் நியமித்தது. கேரள ஐகோர்ட் முன்னாள் நீதிபதி எம்.என். கிருஷ்ணன் தலைமையிலான இக்குழு, கடந்த 27ம் தேதி, அறைகளை திறக்கத் துவங்கியது.இதுவரை மூன்று அறைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. கடந்த 1ம் தேதி, திறக்கப்பட்ட அறையில் இருந்த பொருட்களின் பட்டியல், 2ம் தேதி தயாரானது. இன்னும் முழுமையான அளவில் பொக்கிஷம் குறித்த கணக்கெடுப்பு முடியவில்லை.
பொக்கிஷம்திறக்கப்பட்ட மூன்று அறைகளில் உள்ளவற்றின் மதிப்பு மட்டுமே இன்றைய நிலையில், 90 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். நான்கடி உயரமுள்ள, தங்கத்தால் ஆன விஷ்ணு சிலை மற்றும் பல்வேறு சிலைகள், 18 அடி நீள தங்க மாலை என, காலத்தால் மதிப்பிட முடியாத பழமையான பொருட்கள் இந்த அறைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.அதே நேரம், திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் இருந்த போது, அப்போதைய விஜயநகரப் பேரரசுடன் கொண்டிருந்த வர்த்தகத் தொடர்பால், விஜயநகர காலத்து நாணயங்களும் இந்த அறைகளில் கிடைத்துள்ளன. இவை, வரலாற்று அறிஞர்களால் பொக்கிஷமாகக் கருதப்படுகின்றன.அறைகள் திறக்கப்படுவதற்கு முன் பேட்டியளித்த குழுத் தலைவர் முன்னாள் நீதிபதி கிருஷ்ணன், இப்பணிகள் அனைத்தும் ஒரு வார காலத்திற்குள் முடிந்து விடும் என நம்புவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போதைய நிலையில் இப்பணி மேலும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என தெரிகிறது.
மன்னர் குடும்பத்து எளிமை : இந்தியாவில் அரச குடும்பங்களின் பராமரிப்பில் இருந்த கோவில் செல்வங்கள் அன்னியரால் கொள்ளையடிக்கப்பட்டதும், பல்வேறு வழிகளில் அக்குடும்பங்களால் செலவழிக்கப்பட்டதும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாகப் பூட்டி வைக்கப்பட்டுள்ள இந்த அறைகளில் இருந்து ஒரு குண்டுமணி அளவுகூட காணாமல் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு, பத்மநாப சுவாமி மீது அரச குடும்பம் கொண்டுள்ள ஆழ்ந்த பக்தி தான் காரணம் என, மக்கள் கருதுகின்றனர்.கி.பி., 13ம் நூற்றாண்டில், மாலிக்கபூர் படையெடுப்பு நடந்த போது, பாண்டிய மன்னராக இருந்த வீரபாண்டியன் வலுவற்று தோல்வி அடைந்ததால், கோவில்களில் ரகசிய அறைகள் ஏற்படுத்தி பாதுகாப்பை அதிகப்படுத்தியதாக வரலாறு கூறுகிறது.
பாதுகாப்பு எவ்வாறு?பிரிட்டிஷ் ஆட்சி முடிந்த பின்பு, மாநில மற்றும் மத்திய அரசுகளின் கைகளுக்கு வந்த பல்வேறு கோவில்களில் இருந்த அளப்பரிய செல்வங்கள் அனைத்தும் அரசின் கைகளுக்கே சென்றதும், அதன் பின் அவை பற்றிய தகவல்களே கிடைக்காததும், அல்லது அவை தவறாகப் பயன்படுத்தப்பட்டமையும் தான் அறிஞர்களின் கவலைக்கு காரணங்களாக கூறப்படுகின்றன. இதுகுறித்து, இந்திய வரலாற்று காங்கிரஸ் தலைவர் நாராயணன் கூறியதாவது:இந்தச் செல்வங்களை, மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுக்கக் கூடாது. இவை அனைத்தும் பழைய நிர்வாக முறைப்படி திருவிதாங்கூர் அரச குடும்பத்தாலேயே கோவிலில் பாதுகாக்கப்பட வேண்டும்.அரசுகளால் எடுக்கப்பட்ட கோவில்களில் இருந்த செல்வங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதும், மோசடி செய்யப்பட்டதும் நாம் அறிவோம். அது போன்ற சம்பவங்கள் இந்தக் கோவிலில் நடக்கக் கூடாது.கோவிலிலேயே ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, அதில் சில முக்கியமான பொருட்களை மட்டும் காட்சிக்கு வைத்து விட்டு, மற்றவற்றை ரகசிய அறைகளில் வைத்து பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு நாராயணன் தெரிவித்தார்.
வரலாற்று அறிஞர் மற்றும் எழுத்தாளரான எம்.ஜி.சசிபூஷண், "வருங்கால தலைமுறைக்கும் இவை பற்றிய தகவல்கள் சேர வேண்டுமானால் இவை அனைத்தும் உரிய முறையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார். அதேபோல், வி.எச்.பி., நாயர் சர்வீஸ் சொசைட்டி, நாராயண தர்ம பரிபாலன யோகம் போன்ற அமைப்புகள், இந்தச் செல்வங்கள் அனைத்தையும் மத்திய அல்லது மாநில அரசுகள் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், இவற்றை கோவில் சொத்துகள் என அறிவிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளன.இதனிடையே, நடைபெற்று வரும் கணக்கெடுப்பு பற்றி கருத்து ஏதும் சொல்ல விரும்பவில்லை என்று, மன்னர் வாரிசான உத்தரம் திருநாள் மார்த்தாண்ட வர்மா நேற்று தெரிவித்தார்.
மக்களை ஈர்க்கும் கோவில்:
* கி.பி., 9ம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்மாழ்வார் இக்கோவிலைப் பாடியுள்ளார்.
*தமிழகம் மற்றும் கேரள கட்டடக் கலைகள் இணைந்த கோவில் இது.
*கி.பி., 1686ல் இக்கோவில் முழுவதும் தீக்கிரையானதால், அப்போதைய மன்னர் மார்த்தாண்ட வர்மாவால் புதுப்பிக்கப்பட்டது.
*மரத்தால் ஆன மூலவர் விக்ரகம் தீயில் சேதம் அடைந்ததால், 12 ஆயிரம் சாளக்கிராமக் கற்கள் மற்றும் கடுசர்க்கரையால் மூலவர் புதிதாக உருவாக்கப்பட்டார்.
*திருவிதாங்கூர் சம்ஸ்தானத்திற்கு தலைவர் பத்மநாப சுவாமி தான் என்பதால் அவருக்கு, பிரிட்டிஷ் ஆட்சியில், 21 குண்டுகள் முழக்கி மரியாதை செய்யப்பட்டது. சுதந்திர இந்தியாவில் மன்னர் மானிய ஒழிப்பு வரும் வரை இந்த மரியாதை நீடித்தது.
*பிரிட்டிஷ் ஆட்சியில், அப்போதைய மன்னர் சித்திரைத் திருநாள், "ராஜப்ரமுக் (கவர்னர்) என்று பட்டம் சூட்டப்பட்ட போதும் கூட, அவர் கோவில் சொத்துகளை முறையாகவே பராமரித்து வந்தார்.
*நீண்ட காலமாக மன்னர்கள், மக்களுக்கு விதிக்கும் அபராதம் இக்கோவிலில் தங்க ஆபரணங்களாகச் சேர்க்கப்படுவது வழக்கம். கோவில் பொருளை எவரும் திருட முற்பட்டதில்லை என்பதும் இங்கேயுள்ள தனிச்சிறப்பாகும்.

மனிதாபிமானம்னா என்னன்னே தெரியாத நாடு சவுதி அரேபியா..(இது உண்மை சம்பவம் )



''நீ இந்துவா முஸ்லிமாமுஸ்லிம் தவிற யாருக்கும் இங்க ட்ரீட்மென்ட்கிடையாதுஉன் கால் அழுகிப் போறதுக்குள்ள காசு வேண்டாம்னு கையெழுத்துப்போட்டுக் கொடுத்துட்டு ஊருக்கு ஓடிப்போ''
-எலும்பு நொறுங்கிய நிலையில் மருத்துவமனையில் படுத்துக் கிடந்த இந்தியஇளைஞன் ஒருவனை இப்படியாக விரட்டியடித்திருக்கிறது சவுதி அரேபிய அரசு.
''மனிதாபிமானம்னா என்னன்னே தெரியாத நாடு சவுதி அரேபியாஎத்தனை ஜென்மம்ஆனாலும் என் பாவம் அவங்களைச் சும்மா விடாது'' என்று கண்ணீர் வடிக்கிறார்ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த சதீஷ்பாபு.

சதீஷ்பாபுவுக்கு வயது 28. மெக்கானிக்கல் என்ஜினியரிங்கில் டிப்ளமோமுடித்திருக்கிறார்இன்னும் கல்யாணமாகவில்லைநகையை விற்றுவட்டிக்கு கடன்வாங்கி ஆயிரமாயிரம் கனவுகளுடன் விமானம் ஏறினார்பிறகு...

''சவுதிக்கு போகப்போறோம்னு தெரிஞ்சவுடனேமுதல்ல வீட்டுக் கடனையெல்லாம்அடைச்சிடனும்திரும்பி வந்ததும் ஊரே மெச்சுற‌ மாதிரி செக்கச் செவேல்னு ஒருபொண்டாட்டிஅவளுக்குன்னு ஒரு அழகான வீடுஎன் குழந்தைங்க, ''பசியா?அப்டின்னா என்ன?''ன்னு கேக்கணும்இன்னும் என்னவெல்லாமோ கனவு கண்டுட்டுஇருந்தேன்ஆனாஎன்னோட ஒரு காலை இழந்துஇப்போ ஊணமா நிக்கிறேன்.இதுக்கெல்லாம் காரணம்மனிதத் தன்மையே இல்லாத சவுதி அரேபியாதான்'' என்றுசபிக்கும் சதீஷ்பாபுதொடர்ந்து தன் சோகத்தைச் சொல்கிறார்.

''2005, நவம்பர் மாசம்சவுதியில் இருக்கிற எங்க சித்தப்பா மூலமாத்தான் நான்வேலைக்குப் போனேன்அல்ஜூப் நகர் பக்கத்துல 'சகாகா'ங்கிற இடத்துல‌ அவர் பஞ்சர்கடை வச்சிட்டிருந்தார்அவருக்கு பழக்கமான 'மெத்தான்'ங்கிறவர்தான் எனக்குஹவுஸ் டிரைவர் விசா கொடுத்திருந்தார்இதுக்காக மாசம் 1,200 ரூபாயைமெத்தானுக்கு நான் கொடுத்தாகணும்இந்த விசாவை வச்சுக்கிட்டு நாமவேறெங்கயாவது வேலை பாத்துக்கலாம்.
வாயைக்கட்டிவயித்தைக்கட்டி ஒவ்வொரு ஏரியாவா வேலை பாத்ததுல மாசம்பத்தாயிரம் சம்பாதிக்க முடிஞ்சதுஅப்போ நான் சந்திச்ச அனுபவம் இருக்கே... 'சோத்துக்கு வழியில்லைன்னாலும் சொந்த ஊருக்கு எந்த ஊரும் ஈடாகாது'ங்கிறஉண்மை தெரிஞ்சது.

அங்க வேலை செய்யப் போறவங்களுக்கு 'மஜிராராய்க்கணம்'னு ரெண்டு விசாஇருக்கு. 'மஜிரா'ன்னா ஈச்சம்பழம் பறிக்கிறதுதோட்ட வேலை பாக்கிறதுன்னு விவசாயவிசா. 'ராய்க்கணம்'னா ஒட்டகம்ஆடு மேய்க்கிறதுதப்பித் தவறிகூட யாரும் இந்தவேலைக்கு வந்துடக்கூடாதுஇவங்களுக்கு தோட்டத்துல ஒரு துணி கூடாரம்போட்டுத் தநதுடுவாங்கஅதுலதான் படுத்துக்கணும்ஒட்டகததுக்கு வைக்கிறதண்ணியைதான் குடிச்சிக்கணும்.

எங்கள மாதிரி ஆளுங்களை ஒரு அடிமையாத்தான் அரபு ஷேக்குங்க நடத்துவாங்க.காரணமே இல்லாம அடிஉதை விழும்எதுத்துப் பேசிட்டோம்னா, 'இஸ்லாத்தைத்தப்பாப் பேசிட்டான்'னு சொல்லி பள்ளி வாசலுக்கு இழுத்துட்டுப் போயிடுவாங்க.
இலங்கையிலிருநது வந்திருந்த காண்டீபனை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அப்படிகூட்டிட்டுப் போய் சவுக்கால அடிச்சாங்கஒரு ஆள் எந்த ஊர்னே தெரியலைஅவரைக்காருக்குப் பின்னாடி வச்சுக் கட்டிதரதரன்னு ரோட்ல இழுத்துட்டுப் போகும்போதுஎங்களால அழக்கூட முடியலதஞ்சாவூர்காரர் ஒருத்தர்அங்கிருந்த பெட்ரோல்பங்க்கில் வேலை பாத்துட்டு இருந்தார்யாரோ அவர்கிட்ட கள்ள நோட்டைக் கொடுத்துஏமாத்திட்டுப் போய்ட்டாங்ககொஞ்ச நாள் கழிச்சு அதே ஆளுங்க பெட்ரோல் போடவந்தப்போஇவர் அவங்களை பிடிச்சுக் கொடுததுட்டார்மறு நாள் துப்பாக்கியோடதிரும்பி வந்தவங்கஅவரோட தோள்பட்டையிலும்தொடையிலும் சுட்டுட்டுப்போய்ட்டாங்கஇதையெல்லாம் பார்த்த நம்மாளுங்க எது நடந்தாலும் வாய் திறக்கிறதேஇல்லை.

ரோட்ல நாம நடந்து போகும்போது பக்கத்துல கார் வந்து நின்னுச்சின்னா ஓடிப்போயிரணும்ஏன்னாகையில லத்தியை வச்சிக்கிட்டு ஓங்கி அடிக்கிறது அங்குள்ளபணக்காரங்களுக்கு பொழுதுபோக்குஸ்கூல் படிக்கிற சின்னப் பசங்கபலூன்நிறைய மூத்திரத்தைப் பெஞ்சு வச்சுக்கிட்டு நம்மாளுங்க வரும்போது மூஞ்சியிலவீசியடிப்பானுங்கஅதேபோல முட்டையை வீசுறதும் அவங்களுக்குப் பிடிச்சவிளையாட்டுநாம ஷாட்ஸ்கைலி எல்லாம் போட்டுகிட்டு நடநது போனாஅதையும் அவுததுப் போட்டு அவமானப்படுததுவானுங்க..
'முத்தப்பா'ன்னு தாடி வச்சக் கூட்டம் ஒண்ணு அப்பப்போ ரோந்து வரும்.போலீஸைவிட இவங்களுக்குத்தான் பவர் ஜாஸ்தியாராவது பிரச்னைலமாட்டியிருந்தாஉடனடியா அவங்களை இஸ்லாத்துக்கு மாறச்சொல்லிகட்டாயப்படுததுவாங்கஇல்லைன்னா தண்டனை கடுமையா இருக்கும்.
இந்தியா ஆளுங்கன்னா 'நீ இந்துவா?'ன்னு கேட்ட பிறகுதான் விசாரனையேஆரம்பிப்பாங்கஇதனாலயே பலர் சும்மா பேருக்கு முஸ்லிமா மாறிட்டு ஊருக்குவந்தப்புறம் இந்துவாகிடுவாங்கஒரு லட்சம் கடனை வாங்கிட்டு சம்பாதிக்கவந்திருக்கேனே... அதையாவது திருப்பி அடைக்கணுமேன்னு கஷ்டப்பட்டு உழைக்கஆரம்பிச்சேன்.

ரெண்டு வருஷம் கழிச்சு நானும்என் ஃபிரண்ட் கமுதி ராமசாமிப்பட்டியைச் சேர்ந்தசிதம்பரமும் சேர்நது 'சகாகா'வுலயே சொந்தமா பஞ்சர் கடை ஒண்ணு போட்டோம்.இதை என்னோட கஃபில்(முதலாளிமெத்தான்கிட்ட யாரோ போட்டுக்கொடுத்துட்டானுங்கஅந்தாளு வந்து, ''சொந்தமா கடை வச்சிருக்கியாமாசம்மூவாயிரம்வருஷத்துக்கு இருபத்தஞ்சாயிரம் கமிஷன் கொடுத்தாத்தான் உன்னோட'இக்காமா'வை(அடையாள அட்டையைரெனிவல் பண்ணுவேன்'னு மிரட்டினார்.
இது சம்பந்தமா 'சகாகாவந்திருந்த இந்திய தூதரக அதிகாரிகள்கிட்ட சொன்னப்போ, 'இதையெல்லாம் நீங்கதான் பேசித் தீர்ததுக்கணும்பாஸ்போர்ட் ரெனிவல் பண்றதுமட்டும்தான் எங்களோட வேலை'ன்னு சொல்லிட்டாங்கவேற வழியில்லாம மாசம்ரெண்டாயிரம் கொடுக்கறேன்னு ஒத்துக்கிட்டு தொழிலைப் பாத்துக்கிட்டிருந்தேன்.

போன மாசம் 21-ம் தேதி காலைல வாட்டர் சர்வீசுக்காக ஒரு கார் வந்து நின்னதுஅதைரிவர்ஸில் எடுக்கச்சொல்லிக் கை காமிச்சிட்டு இருந்தப்போபிரேக்கை மிதிக்கிறதுக்குப்பதிலாஅவன் ஆக்ஸிலேட்டரை மிதிச்சிட்டான்கார் வேகமா வநது மோதினதுலஎனக்கு கால் உடைஞ்சிருச்சுஉடனடியா அங்கிருந்த ஜி.எச். என்னை அட்மிட்பண்ணாங்க.
'ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டிருக்குவாஸ்குலர் சர்ஜரி பண்ணனும்அதுக்குஆஞ்சியோகிராம் மெஷின் இங்க இல்லைவேற ஹாஸ்பிட்டல் பாததுக்கங்க'ன்னுசொல்லிட்டாங்கபக்கததுல உள்ள 'தபுக்ஏரியாவில் அந்த வசதி இருந்ததுஆனா,முஸ்லிம்களை மட்டும்தான் அட்மிட் பன்ணுவோம்வேற யாருக்கும் அனுமதிஇல்லைன்னு சொல்லிட்டாங்க.
ஜி.எச்.சில் இருந்த டாக்டர், 'சீக்கிரமா நீ இந்தியாவுக்கு போனாத்தான் உன் காலைக்காப்பாத்த முடியும்'னு சொல்லிட்டார்லோக்கல் போலீஸ்காரங்க வந்து, 'இந்தியாபோகணும்னா மேற்கொண்டு இழப்பீடு கேட்க மாட்டேன்வழக்குத் தொடரமாட்டேன்னு கையெழுத்துப் போட்டாத்தான் உங்களை விடுவோம்'னுமனிதாபிமானமே இல்லாம பேசினாங்க.
நஷ்ட ஈட்டுக்காக காலையா இழக்க முடியும்நன்பர்களோட உதவியால சவுதிஅரேபியன் ஏர்லைன்ஸ்' எனக்கு மட்டும் நாலு சீட் ரிசர்வ் பண்ணேன்அப்போதான்காலை நீட்டி சவுகர்யமா வச்சுக்க முடியும்போன 26-ம் தேதி காலைல 9-மணிக்கு'அல்ஜூஃப்' இருந்து கிளம்பி 10-மணிக்கு ரியாத் வநது சேர்ந்தேன்அங்கிருநதுசென்னைக்கு நடு ராத்திரி 1.30-மணிக்குத்தான் ஃபிளைட்இதுக்கிடையில் பதினஞ்சுமணி நேரம் நான் பட்ட கஷ்டம் இருக்கே... இப்போ நினைச்சாக்கூட நடுங்குது.
காலை நீட்டி உக்காரக்கூட அனுமதிக்கலைஅங்க என்னைக் கேட்ட முதல் கேள்வி, 'நீ இந்துவாமுஸ்லிமா?'ங்கிறதுதான். 'இந்து'ன்னு சொன்னவுடனே, 'வெளியேபோடா நாயே!'ன்னு துரத்தி விட்டுட்டாங்கஉதவிக்கு யாருமில்லைஒண்ணுக்குப்போகக்கூட வழியில்லாம நான் பட்ட கஷ்டம்காலை நீட்டி வைக்காம தொங்கப்போட்டதால வலி உயிர் போச்சு.
உலகத்திலேயே மிகப்பெரிய பாவம் பண்ண‌‌வனுக்குத்தான் ஆண்டவன் அப்படியொருவலியைத் தருவான்பதினஞ்சு மணி நேரம்ங்கிறது எத்தனை நொடியோஅத்தனைநொடியும் உயிர் போகிற வலியை அனுபவிச்சேன்.

ஒரு வழியா சென்னை வநது அப்பல்லோ ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆனேன்ரெண்டுநாள் முன்னாடி வந்திருந்தா காலை காப்பாத்தி இருக்கலாம்னு சொல்லிட்டாங்கநாலுடிக்கெட் ரிசர்வ் பண்ணதுக்கு 60 ஆயிரம் ஆச்சுஇங்கே என் காலை வெட்டியெடுக்க 1லட்சத்து நாப்பதாயிரம் கொடுத்திருக்கேன்.
நஷ்ட ஈடு எதுவும் கேட்க மாட்டேன்னு சவுதி போலீஸ்காரங்க‌ கட்டாயப்படுத்தக்கையெழுதது வாங்கிட்டாங்கஇதுக்கெல்லாம் யார் பொறுப்புஎன் வாழ்க்கையோடஎதிர்காலத்துக்கு யாராவது உதவுவாங்களாஎந்த பதிலும் எங்கிட்ட இல்லைஆனா,ஒண்ணு மட்டும் சொல்வேன்பிச்சையெடுத்தாலும் உள்ளூர்லயே எடுங்க‌. வெளிநாட்டுவேலைக்குப் போய் மோசம் போய்டாதீங்க'' &கண்களில் விரக்தியுடன் சொல்லிமுடித்தார் சதீஷ்பாபு.
                                                           

அப்பல்லோ உள்ளிட்ட இந்திய மருத்துவமனைகளுக்கு நீண்ட பைஜாமாவும்நீண்டதாடியும் வைத்த அராபிய ஷேக்குகள் தினந்தோறும் வந்துபோய்க்கொண்டிருக்கிறார்கள்அவர்களுக்கு எந்தக் குறையும் இல்லை.

ஞாயிறு, 3 ஜூலை, 2011

தூங்கும்போது செல்போன் பேசறாமாதிரி கனவு கண்டேன்டா..




அரசியல்வாதி (மேடையில்) : விலைவாசி உயர்வு திரும்பக் 
குறையும் வரை நான் சாகாவிரதம் இருக்கப் போகிறேன் 
என்பதை மக்களே, உங்கள்முன் உறுதியிட்டுக் கூறிக் கொள்கிறேன்!!!
................................................................................................................................................

தொண்டர் 1 : பதவி பெருசா, குடும்பம் பெருசா?

தொண்டர் 2 : பதவியில் இருக்கிற குடும்பம்தான் பெருசு!
...............................................................................................................................................

தளபதி: மன்னா, காளைப் படை ஒன்றை நமது படையில்
சேர்ப்போமா? 

மன்னர்: நான்தான் காலையே படையாக வைத்து
இருக்கிறேனே, காளைப் படை என்று எதற்கு தனியாக?
.............................................................................................................................................
தலைவர் : நாங்கள் போனமுறை 500 கோடி ஊழல் செய்தோம்;
இந்த முறை 300 கோடி ஊழல் செய்தோம்...

தொண்டன் 1: தலைவர் என்னப்பா சொல்றாரு?

தொண்டன் 2:  இது கொள்ளை விளக்க பொதுக் கூட்டமாம்!
...........................................................................................................................................

அரசன்  (செய்தி கொண்டுவந்த புறாவைப் பார்த்து ) : புறாவே,
வா! உன்னை வறுக்க வறுக்க என்று  வரவேற்கிறேன்.
..........................................................................................................................................
விமான நிலைய அதிகாரி:  சார் நீங்க அளவுக்கு அதிகமாகக் 
குடித்திருக்கிறீர்கள். உங்களை விமானத்தில் அனுமதிக்க முடியாது.

பயணி:  அப்படின்னா சரக்கு விமானத்திலயாவது ஏத்திக்குங்க சார்!
...........................................................................................................................................
 
தலைவர் ( மேடையில்) : நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
வெறும் வாயை மெல்லுபவர்களுக்காக  இலவச  அவல்
திட்டம்  கொண்டு வரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்து கொள்கிறோம்.
........................................................................................................................................... 

--தூங்கும்போது செல்போன் பேசறாமாதிரி கனவு
கண்டேன்டா..

 --அப்புறம் என்ன ஆச்சு?

--விடிஞ்சதும் போன்ல  பேலன்ஸ் இல்லடா!

.........................................................................................................................................
நண்பன் 1: காலம்பூரா உட்கார்ந்து சாப்பிடுரமாதிரி  
வசதி செஞ்சி  வச்சிட்டுப் போயிருக்காரு எங்க தாத்தா!

நண்பன் 2:  அவ்வளவு சொத்து வசதியா?

நண்பன் 1: இல்லடா, நல்ல ஸ்ட்ராங்கா மர பெஞ்ச் செஞ்சி வச்சிட்டாரு...!
..........................................................................................................................................

சேவகன்: மன்னா,  போர் நிறுத்தம் ஆகிவிட்டது...

மன்னன்:  கண்கள் பனித்தன!  இதயம் இனித்தது!!