வியாழன், 26 மே, 2011

எங்க ஊர் எழுத்தாளர் -ப. ராமகிருஷ்ணன், காயக்காடு.


ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா

எங்க ஊர் எழுத்தாளர்
. ராமகிருஷ்ணன்


எனக்கு நன்கு தெரிந்த ஒரு நண்பர் நான் சிறு வயதில் என்னை ஒரு புத்தக புழுவாக மாற்றியவர் இவரிடம்அணைத்து வகையான புத்தகமும் இருக்கும் எனக்கு சிறு வயதில் சாதாரண குடும்பத்தில் பிறந்த எனக்கு இதுபோல் புக்குகள் வாங்க முடியாது அந்த காலகட்டத்தில் எனக்கு அவருடைய அணைத்து வகையான புத்தகம் இலவசமாக எனக்கு கிடைக்கு.இவரும் எவ்வளோவோ கதை கட்டுரை கவிதை காமெடி என பலவிதமான படைப்புகளை வெளியுட்டுள்ளர் எங்கள் ஊரில் முதல் முதலில் இவ்வாறான திறமைகள் வெளிக்காட்டி கொண்டவர் இவர் இந்த பெருமையும் இவரை சாரும்.இனியும் நீங்கள் தளராமல் உங்கள் படைப்புகள் அனைத்தையும் வெளியுடுமாறு கேட்டுகொள்கிறேன்

* தர்மம் ஏன் கர்ணனைக் காக்கவில்லை? சகுனம் பார்க்கலாமா, கூடாதா? ஏழை களையே கடவுள் அதிகம் சோதனைக் குள்ளாக்குவது ஏன்? எந்த விரதம் வலிலிமை வாய்ந்தது? மனிதன் கடவுளின் பொம்மை தானே?

-ப. ராமகிருஷ்ணன், காயக்காடு.

உயர்ந்த சர்க்கரைப் பொங்கலாய் இருந்தால் கூட அடுத்தவர் சாப்பிட்ட தட்டில் வைத்துக் கொடுத்தால் நாம் அதை உண்ண மாட்டோம். நல்லவர்களாய் இருந்தால்கூட- நல்ல செயலைச் செய்தால்கூட அதர்மத்தின் பக்கம் நின்றால் மரணம்தான் பரிசு. கர்ணன் தானம் செய்தது உயர்ந்ததாய் இருந்தாலும்கூட, அவன் அதர்மத் தின் சொரூபமான துரியோதனின் பக்கத்தில் இருந்ததால் தர்மம் அவனைக் காக்கவில்லை.

சகுனம் கட்டாயம் பார்க்க வேண்டும். ஆனால் நாம் வீட்டில் வளர்க்கும் பூனை நமக்கு குறுக்கே வரும்போது சகுனம் பார்ப்பது மூடத் தனமாகும். இதய வலிலி என்று அவசரமாக மருத்துவமனை செல்லவேண்டி இருக்கையில், பிரசவ காலத்தில் சகுனம் பார்த்துக் கொண்டி ருப்பது மூடத்தனமாகும். ஒரு நல்ல செயலை நிறுத்தி நிதானமாகச் செய்யும்போது சகுனம் பார்க்கலாம். அவசர காலத்தில் சகுனம் பார்ப்பது தவறு.

ஏழைகளை மட்டும் கடவுள் அதிகம் சோதனைக்குள்ளாக்குவார் என்று எண்ண வேண்டாம். பணம் உள்ளவர்களுக்கும் வசதி உள்ளவர்களுக்கும் வியாதி வருகிறது; வழக்கு வருகிறது; பிரிவு வருகிறது. கடவுள் எல்லாருக் கும் சோதனையைக் கொடுக்கத்தான் செய்கிறார். பலருக்கு வெளியே தெரிவதில்லை. சிலருக்கு வெளியே தெரிகிறது.

ஏகாதசி விரதம் உயர்ந்ததாகச் சொல்லப் பட்டுள்ளது. கடவுள் எந்தக் காலத்திலும் மனிதனை பொம்மையாகப் படைக்கவுமில்லை; இருக்கச் சொல்லவுமில்லை. நாமே அப்படி ஒரு பொய்யான தோற்றத்தில் நினைத்துக் கொள்கிறோம். இறைவன் இருக்குமிடம் மனிதனின் மனமாகும்

கருத்துகள் இல்லை: