வெள்ளி, 27 மே, 2011

இவன் ரொம்ப நல்லவன்"னு சொல்லிட்டாருமா,.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்,...

                                                 
நாம்பாட்டுக்கு காயாக்காட்டுல செவனேன்னு பெஞ்சுல உக்காந்திருந்தேன்.

 திடீர்னு ஒரு மெனேஜர் மெயில் பண்ணி, மச்சி ஒரு Project இருக்கு

சேந்துக்கிருயானு கேட்டான். நானும் சரின்னு சொன்னது வம்பா போச்சு. அவன்

 பெங்களுர்ல ஒருத்தவனுக்கு போனப்போட்டு இங்க ஒருத்தன் சிக்கியிருக்காண்டா வாடா

 சொன்னான். அதுக்கு அவன் சொன்னான், அவன இங்க அனுப்புடா நான் பாத்துக்கறேன்னு.

 ஒரு ஏசி பஸ்ல ஏத்தி என்ன பொங்களூருக்கு அனுப்பினாங்க. நானும் வெயில் காலத்துல

 குளுகுளூன்னு இருக்குமேன்னு நம்ம்ம்பி பெங்களூருக்கு வந்துட்டேன். இங்க டீம்ல ஒரு 20

 பேரும்மா, எல்லாப் பயலுகளும் முச்சுத் தெணற தெணற வேலை செய்யறானுங்க..

 OUTLOOKகும் ORKUTடும் மட்டுமே பார்த்த எனக்கு இது புதுசா இருக்கு..என்னோட மெனேஜர்

 வேற அவரால எவ்வளவு முடியுமோ அவ்வளவு யும் எங்கிட்டத் தள்ளீ விட்டாரு, நானும்

 எவ்வளவு நேரம் தான் எழுதற மாதிரியே நடிக்கிறது?

(உங்களால் முடீயலன்னா தெரியதுன்னு சொல்லிட வேண்டியதுதான?)

நான் எப்பவும் வேலை செய்யாம மெயில் பண்ணிட்டே இருக்கிறத பார்த்துட்டு என்னோட

 மெனேஜர் "எவ்வளவு வேலை கொடுத்தாலும் இவன் மெயில் பண்ணீட்டே இருக்கான்,

 இவன் ரொம்ப நல்லவன்"னு சொல்லிட்டாருமா,

.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்,...

கருத்துகள் இல்லை: