ஞாயிறு, 29 மே, 2011

கல்யாணம் முடிஞ்சு 6 மாதம்

                                                    

"என்னமா இத்தனை தொட்டுக்க இருக்கு.. இப்போ போயி 
கல்யாணம் முடிஞ்சு 6 மாதம் 

ஆம்லெட் போட்டுட்டு இருக்க, அதுவும் சின்ன வெங்காயம் எல்லாம் போட்டு.. வாம்மா வந்து உக்காரு சேந்து சாப்பிடலாம்.. எவ்வளோ தான் நீ கஷ்டபடுவ.."

"கொஞ்சம் பொறுங்க.. நீங்க தொட்டுக்க ஆம்லெட் இல்லேன்னா சரியா சாப்பிடமாட்டீங்க.. அத்துவும் சின்ன வெங்காயம் போட்டாதான் டேஸ்ட் நல்ல இருக்கும்னு சொல்லுவீங்க... அதுக்குதான்"

கல்யாணம் முடிஞ்சு 1 வருடம் 

"என்னம்மா இன்னைக்கு ஸ்பெஷல் "

"சாம்பார்,பெரிய வெங்காயம் போட்டு ஆம்லெட்"

"அவ்வளோதானா"

"முடியலைங்க"

கல்யாணம் முடிஞ்சு 1 1 /2 வருடம் 

"என்னம்மா இன்னைக்கு சாப்பிடலாமா "

"இருங்க இந்த சீரியல் முடியட்டும். என்னங்க,கொஞ்சம் பெரிய வெங்காயம் உறிச்சு குடுங்க ஆம்லெட் போடறேன் "

கல்யாணம் முடிஞ்சு 2 வருடம் 

"என்னம்மா வெங்காயம் இல்லாம ஆம்லெட் போட்டு இருக்க. எனக்கு பிடிக்காதுன்னு தெரியும்ல"

" ஒரு நான் இதை சாப்பிட்டா என்ன... எல்லாத்தையும் நானே செய்யணுமா"

கல்யாணம் முடிஞ்சு 3 வருடம் 

"என்னம்மா இத்துநூன்டு இருக்கு, கலக்க கூட இல்ல, அப்படியே உடைச்சு புல்பாயிலா ஊத்தி இருக்க.." 

" முட்டை என்ன நானா போடுறேன். கோழி போட்டது சின்னதா இருக்கு , நானா என்ன செய்ய. சும்மா குறை சொல்லிட்டு இருக்காம தொட்டுகிட்டு சாப்பிடுங்க"

கல்யாணம் முடிஞ்சு 5 வருடம் 

"என்ன ஆப்பாயில் போட்டு இருக்க. எனக்கு புடிக்காது தெரியும்ல"

"ஒருநாள் தின்ன ஒன்னும் குறைஞ்சு போயிடாது. ஊர்ல இல்லாத ஆதிசய புருஷன் எனக்கு எனக்கு வந்து வாச்சிருக்கு. 


                                                                    

"வேட்டைக்காரன்" படத்துக்கு பேக் பண்ணி அனுப்புலாம் "

                                                       

நா கொஞ்ச நாளைக்கு முன்னாடி படம் பார்க்க போனேங்க படம் போட்ட

 ரெண்டே நிமிசத்தில ஒரு பாட்டு வந்துச்சு .. சரி ஓடி போய்டலாம்

 அப்படின்னு நினைச்சு , ஒரு ஸ்டேப் அடி வச்சு நகர்ந்தேன்
 ..
ரெண்டே ஸ்டேப் தான்

,
எப்படி கண்டு பிடிச்சான்களோ

..
கப்புனு பிடிச்சு , கட்டி போட்டு படம் பார்க்க வச்சானுங்க .. 

சரி , அனுஷ்கா புள்ளை வருமே , அப்படின்னு நம்பி பார்த்தேன் .. என்னை


 பாவம் செஞ்சேன்னு தெரியல ..அப்புறம் அந்த புள்ளைய காணோம் ..

 கண்ணை இறுக்கி முடிகிட்டு உட்கார்ந்தேன் ..

எல்லாம் முடிச்சதேன்னு , கிளம்புலாமுன்னு பார்த்தா , அப்ப ஒருத்தன் , ஓடி வந்து ,

"இவன் இவ்வளவு அமைதியா பார்க்குறான் . நமக்கு ஒரு அடிமை சிக்கி


 இருக்கிறான் அப்படின்னு சொல்லி , பக்கத்து ஊருல ஓடுற

 "வேட்டைக்காரன்" படத்துக்கு பேக் பண்ணி அனுப்புலாம் " அப்படின்னு

 சொல்றான் ..


நாலு தடவை ஹார்ட் அட்டாக் வந்து போச்சு .. அப்ப பார்த்து , விஜய் என்


 கிட்ட வந்து
 ,
ஒரு கேள்வி கேட்டாருங்க ..அப்புறந்தான் இந்த ஆஸ்பத்திரில வந்து


அட்மிட் ஆயிட்டேன்......

                                              

இவர்கள் யாவரும் காவலர்களே..........................................................................

வணக்கம் நண்பர்களே.......

இந்த படங்களுக்கு கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன............








கொசுறு: இவர்கள் யாவரும் காவலர்களே..........................................................................

சென்னை கிங்ஸ் மீண்டும் சாம்பியன்! *விஜய், அஷ்வின் அபாரம்

சென்னை: ஐ.பி.எல்., கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று சாதனை படைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. நேற்று நடந்த பைனலில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முரளி விஜய், அஷ்வினின் அபார ஆட்டம் சென்னை அணியின் வெற்றிக்கு கைகொடுத்தது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல், "டுவென்டி-20' தொடர் நடந்தது. நேற்று சென்னையில் நடந்த பைனலில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டது. இரு அணிகளிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. "டாஸ்' வென்ற சென்னை கேப்டன் தோனி சற்றும் தயங்காமல் "பேட்டிங்' தேர்வு செய்தார்.
"சிக்சர்' மழை:
சென்னை அணிக்கு முரளி விஜய், மைக்கேல் ஹசி இணைந்து "சூப்பர்' அடித்தளம் அமைத்தனர். பெங்களூரு பந்துவீச்சை துவம்சம் செய்த விஜய், அரவிந்த் பந்தை சிக்சருக்கு விரட்டி அதிரடியை துவக்கினார். மறுபக்கம் மிகவும் "பிசி'யாக இருந்த ஹசி, முன்னணி வீரரான ஜாகிர், முகமது பந்துகளில் தலா ஒரு சிக்சர் விளாசினார். தொடர்ந்து கெய்ல், வெட்டோரி சுழலில் விஜய் சிக்சர் அடிக்க, சென்னை ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். பின் மிதுன் ஓவரில் 2 பவுண்டரி அடித்த விஜய் 29 பந்துகளில் அரைசதம் எட்டினார். தனது வாணவேடிக்கையை தொடர்ந்த இவர், அரவிந்த் வீசிய போட்டியின் 12வது ஓவரில் இரண்டு இமாலய சிக்சர்கள் அடித்தார். மறுபக்கம் வெட்டோரி பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஹசி அரைசதம் கடந்தார். முகமது வீசிய போட்டியின் 15வது ஓவரில் ஹசி, விஜய் தலா ஒரு சிக்சர் அடித்தனர். இதே ஓவரில் இன்னொரு சிக்சர் அடிக்க பார்த்த, ஹசி(63) பரிதாபமாக அவுட்டானார். 
நழுவிய சதம்:
அடுத்து வந்த கேப்டன் தோனி ரன்வேகம் குறையாமல் பார்த்துக் கொண்டார். இவர், கெய்ல் ஓவரில் இரண்டு சிக்சர்கள் அடித்தார். அரவிந்த் வீசிய 19வது ஓவரின் முதல் பந்தை தூக்கி அடித்த விஜய், சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இவர் 52 பந்தில் 95 ரன்கள்(4 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தார். இரண்டாவது பந்தில் தோனி(22) அவுட்டானார். அடுத்த பந்தை ரெய்னா தடுத்து ஆட, அரவிந்தின் "ஹாட்ரிக்' வாய்ப்பு தகர்ந்தது. நான்காவது பந்தில் ரெய்னா சிக்சர் அடித்து அசத்தினார்.
கெய்ல் வீசிய கடைசி ஓவரில் ஆல்பி மார்கல்(2) முதலில் வெளியேறினார். அடுத்த பந்தில் ரெய்னா(8) போல்டானார். கடைசி பந்தில் பிராவோ சிக்சர் அடித்து, 200 ரன்களை கடக்க உதவினார். சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. பிராவோ(6) அவுட்டாகாமல் இருந்தார். 
அஷ்வின் ஜாலம்:
கடின இலக்கை விரட்டிய பெங்களூரு அணி, சென்னை கிங்ஸ் விரித்த "சுழல்' வலையில் அப்படியே சிக்கியது. முதல் ஓவரிலேயே அஷ்வின் பயங்கர "ஷாக்' கொடுத்தார். இவரது சுழலில் "அதிரடி' கெய்ல் "டக்' அவுட்டாக, சென்னை ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். இத்தொடர் முழுவதும் அசத்திய கெய்ல், மிக முக்கியமான பைனலில் கோட்டை விட்டதால், அரங்கில் அமர்ந்திருந்த பெங்களூரு அணியின் உரிமையாளர் மல்லையா அதிர்ச்சியில் உறைந்தார். 
சொதப்பல் ஆட்டம்:
அடுத்து வந்தவர்களும் சொதப்பலாக ஆடினர். தொடர்ந்து அகர்வாலை(10) வெளியேற்றிய அஷ்வின் இன்னொரு "அடி' கொடுத்தார். ஜகாதி சுழலில் டிவிலியர்ஸ்(18), பாமர்ஸ்பச்(2) சிக்கினர். போராடிய விராத் கோஹ்லி(35), ரெய்னா பந்தில் அவுட்டாக, பெங்களூரு கதை முடிந்தது. மீண்டும் பந்துவீச வந்த அஷ்வின், கேப்டன் வெட்டோரியை(0) வெளியேற்றினார். ஜாகிர் 21 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய சவுரப் திவாரி(42*) ஆறுதல் அளித்தார். பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 147 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. 
இவ்வெற்றியின் மூலம் ஐ.பி.எல்., கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாக வெல்லும் முதல் அணி என்ற சாதனையை சென்னை கிங்ஸ் அணி படைத்தது. 
ஆட்ட நாயகன் விருதை முரளி விஜய் வென்றார்.



"ஆரஞ்ச் கேப்' கெய்ல்
நான்காவது ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணியின் கெய்ல், 608 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் எடுத்தவர்கள் வரிசையில் முதலிடம் பெற்று, இதற்கான "ஆரஞ்ச்' தொப்பியை தட்டிச் சென்றார். இத்தொடரில் அதிக ரன்கள் எடுத்த "டாப்-10' வீரர்கள் விவரம்:
பெயர்/அணி    போட்டி    ரன்கள்
1. கெய்ல்(பெங்களூரு)    12    608
2. கோஹ்லி (பெங்களூரு)    16    557
3. சச்சின் (மும்பை)    16    553
4. மார்ஷ் (பஞ்சாப்)    14    504
5. ஹசி (சென்னை)    14    492

மலிங்கா அபாரம்
பவுலிங்கில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் மும்பையின் மலிங்கா (28) முதலிடத்தை பெற்று, இதற்காக "பர்பிள் கேப்' பரிசை பெற்றார். இவ்வரிசையில் "டாப்-5' வீரர்கள் விவரம்:
பெயர்/அணி    போட்டி    விக்.,
1. மலிங்கா (மும்பை)    16    28
2. முனாப் படேல் (மும்பை)    15    22
3. அரவிந்த் (பெங்களூரு)    13    21
4. அஷ்வின் (சென்னை)    16    20 
5. அமித் மிஸ்ரா (டெக்கான்)    14    19

இதுவரை சாம்பியன்கள்
ஆண்டு    சாம்பியன்    எதிரணி
1. 2008    ராஜஸ்தான் ராயல்ஸ்    சென்னை சூப்பர் கிங்ஸ்
2. 2009    டெக்கான் சார்ஜர்ஸ்    பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்
3. 2010    சென்னை சூப்பர் கிங்ஸ்    மும்பை இந்தியன்ஸ்
4. 2011    சென்னை சூப்பர் கிங்ஸ்    பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்

சாதனை ஜோடி
ஐ.பி.எல்., வரலாற்றில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் (159) சேர்த்த ஜோடி என்ற பெருமையை, சென்னை அணியின் முரளி விஜய், மைக் ஹசி பெற்றது. இதற்கு முன் கில்கிறிஸ்ட்-லட்சுமண் இணைந்து, மும்பை அணிக்கு எதிராக 155 ரன்கள் (2008) எடுத்து இருந்தனர்.

விஜய்க்கு சூப்பர் "விசில்' அடிங்க...
சென்னை அணியின் சாம்பியன் கனவுக்கு தமிழக வீரர்களான முரளி விஜய், அஷ்வின் கைகொடுத்தனர். பேட்டிங்கில் அசத்திய முரளி விஜய் 95 ரன்கள் விளாசினார். இவர், ஐ.பி.எல்., தொடரின் பைனலில் அதிக சிக்சர் (6) அடித்தவர் என்ற சாதனை படைத்தார். முன்னதாக 2008 பைனலில், ராஜஸ்தானின் யூசுப் பதான் (எதிரணி-சென்னை), 4 சிக்சர் அடித்திருந்தார். 
இதே போல சுழலில் அசத்திய அஷ்வின் 3 விக்கெட் வீழ்த்தி, அணிக்கு விரைவான வெற்றியை தேடி தந்தார். பெங்களூரு அணி, அன்னிய வீரரான கெய்லை நம்பி ஏமாந்தது. ஆனால், சென்னை அணி மண்ணின் மைந்தர்களை நம்பி சந்தித்தது.

 தோனியின் சாதனை பயணம்
தோனியின் வெற்றிப் பயணம் தொடர்கிறது. இவரது தலைமையில், இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்ற முக்கிய சாம்பியன் பட்டங்கள்...
ஆண்டு/மாதம்    வென்ற கோப்பை 
1. 2007/ஆகஸ்ட்    "டுவென்டி-20' உலக கோப்பை
2. 2010/ஏப்ரல்    ஐ.பி.எல்., "டுவென்டி-20' கோப்பை
3. 2010/செப்டம்பர்    ஐ.பி.எல்., சாம்பியன்ஸ் லீக் கோப்பை
4. 2011/ஏப்ரல்    உலக கோப்பை (50 ஓவர்)
5. 2011/மே    ஐ.பி.எல்., "டுவென்டி-20'

ஸ்கோர்போர்டு
சென்னை சூப்பர் கிங்ஸ்
ஹசி(கே)மிதுன்(ப)முகமது    63(45)
விஜய்(கே)வெட்டோரி(ப)அரவிந்த்    95(52)
தோனி(கே)கோஹ்லி(ப)அரவிந்த்    22(13)
ரெய்னா(ப)கெய்ல்    8(5)
மார்கல்(கே)கோஹ்லி(ப)கெய்ல்    2(4)
பத்ரிநாத்-அவுட் இல்லை-    0(0)
பிராவோ-அவுட் இல்லை-    6(1)
உதிரிகள்    9
மொத்தம் (20 ஓவரில், 5 விக்.,)    205
விக்கெட் வீழ்ச்சி: 1-159(மைக் ஹசி), 2-188(முரளி விஜய்), 3-188(தோனி), 4-199(மார்கல்), 5-199(ரெய்னா).
பந்து வீச்சு: ஜாகிர் கான் 4-0-30-0, அரவிந்த் 3-0-39-2, கெய்ல் 4-0-34-2, சையது முகமது 3-0-39-1, வெட்டோரி 4-0-34-0, அபிமன்யு மிதுன் 2-0-22-0.
பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்
அகர்வால்(ப)அஷ்வின்    10(5)
கெய்ல்(கே)தோனி(ப)அஷ்வின்    0(3)
கோஹ்லி-எல்.பி.டபிள்யு(ப)ரெய்னா    35(32)
டிவிலியர்ஸ்-எல்.பி.டபிள்யு(ப)ஜகாதி    18(12)
பாமர்ஸ்பச்(கே)+(ப)ஜகாதி    2(3)
திவாரி-அவுட் இல்லை-    42(34)
வெட்டோரி(கே)+(ப)அஷ்வின்    0(1)
மிதுன்(கே)போலிஞ்சர்(ப)பிராவோ    11(8)
ஜாகிர்(கே)ஹசி(ப)போலிஞ்சர்    21(21)
சையது-அவுட் இல்லை-    2(2)
உதிரிகள்    6
மொத்தம் (20 ஓவரில், 8 விக்.,)    147
விக்கெட் வீழ்ச்சி: 1-1(கிறிஸ் கெய்ல்), 2-16(அகர்வால்), 3-48(டிவிலியர்ஸ்), 4-62(பாமர்ஸ்பச்), 5-69(விராத் கோஹ்லி), 6-70(வெட்டோரி), 7-92(அபிமன்யு மிதுன்), 8-130(ஜாகிர் கான்).
பந்து வீச்சு: அஷ்வின் 4-0-16-3, மார்கல் 3-0-24-0, போலிஞ்சர் 3-0-28-1, ஜகாதி 4-0-21-2, ரெய்னா 4-0-39-1, பிராவோ 2-0-15-1.

சனி, 28 மே, 2011

தனபாலு, கோபாலு அரட்டை! -

கோபாலு: அண்ணே! அண்ணே! தனபாலு அண்ணே.... வீட்டுல இருக்கிங்களா?

தனபாலு: மடையா ஏண்டா? இப்படி கத்தற, வீட்டுல தாண்டா இருக்கேன். வா அப்படி முக்குல நின்னு பேசுவோம்.

கோபாலு: இல்லைண்ணே, ஒரு வாரமா வீடு பூட்டியிருந்துசே, அதான் கேட்டேன்.

தனபாலு: ஓ...ஓ... அதுவா, சகலை ஊருக்கு குடும்பத்தோட போயிருந்தேன்டா..

கோபாலு: அப்படியாண்ணே, கொழுந்தியா வீட்டுக்கு போயிருந்தேன்னு சொல்ல வேண்டியது தானே.

தனபாலு: டேய்... தம்பி வம்பு இழுக்கற மாதிரி தெரியுது. ஒழுங்கா பேசுடா.

கோபாலு: சரிண்ணே, கொவப்படாதிங்க. எதாவது புதுசா மேட்டர் இருக்கா?

தனபாலு: என்னது? மேட்டரா? செய்தி இருக்கான்னு கேளுடா தம்பி.

கோபாலு: சரிண்ணே. ஏதாவது செய்தி இருக்கா?


தனபாலு: அப்படி கேளுடா தம்பி. நம்ப ரஜினி உடம்பு சரியிலாம ஆஸ்பத்திரில இருக்காருல்ல. இப்ப கொஞ்சம் கொஞ்சமா முன்னேற்றமா இருக்காம். இருந்தாலும் மேல் சிகிச்சைக்காக அடுத்த வாரம் லண்டன் போறாராம்.

கோபாலு: ஆமாண்ணே! எப்படியாவது தலைவரு உடம்பு சரியாகி மறுபடியும் படத்துல நடிக்கணும். அதான் இந்த ரசிகனின் ஆசை.

தனபாலு: ஆமாண்டா, நானும் அப்படிதான் ஆசை படறேன்.

கோபாலு: அண்ணே! ஒரு விஷயம் தெரியுமா? ஜெயலலிதா முதல்வரா உட்கார்ந்துட்டாங்கல்ல, அதுக்காக நாக்கை அறுத்துக்கிட்டா கவர்மென்ட் வேலை உறுதியா கிடைக்கும். அப்படிதான் ஒரு பொண்ணுக்கு வேலை கிடைச்சிருக்கு.

தனபாலு: அடப்பாவிகளா, இப்படியெல்லாம் கூத்து நடக்குதா?

கோபாலு: ஆமாண்ணே, அந்த பெண்ணுக்கு உறவினர் யாரும் இல்லையாம், அதனால பரிதாப பட்டு வேலை போட்டு கொடுத்திருக்காங்க. அதோட அவங்க தங்குற வீட்டு வாடகை செலவையும் அரசே ஏத்துக்கிட்டதாம்.

தனபாலு: டேய்... நம்ம நாட்டுல இருக்கற சிங்கத்துல சீனியர் சிங்கம் நேத்து இறந்து போயிருச்சு. பாவம்டா...

கோபாலு: எப்படி அண்ணே இறந்துச்சு.... விளக்கமா சொல்லுங்கண்ணே!

தனபாலு: பொதுவா சிங்கத்தோட ஆயள் வயசு பதினாலு வருஷம். ஆனா இந்த சிங்கம் மொத்தம் பத்தொன்பது வருஷம் வாழ்ந்திருக்கு. அதோட உடம்பு பாகங்கள் ஒண்ணொண்ணா பலவீனம் ஆகி சாப்பிடாம பட்டினியா இருந்து தன்னோட உயிரை விட்டிருக்குது.

கோபாலு: அண்ணே! சுமாரா உங்களுக்கு டெலிபோன் பில் எவ்வளவு வரும். சொல்லுங்க.

தனபாலு: ஹி...ஹி...நான் போனே பண்றது இல்லை. எப்பவுமே மிஸ்டு கால் தான். நம்ம ஏமாந்த பயலுக இருக்கிற வரை மிஸ்டு காலு தான் கொடுப்பேண்டா.

கோபாலு: அண்ணே! உங்களுக்கு சிரிப்பா இருக்கு. பாவம்ண்ணே சென்னையில ஒருத்தருக்கு 41 லட்சம் பில் தோகை வந்திருக்குது. பாவம் அவருக்கு கண்ணே கட்டி போச்சு. அரண்டு போய் கமிசனர் ஆபீசுல புகார் கொடுத்திருக்காரு.

தனபாலு: எப்படிடா... இம்புட்டு தொகை பில்லா வந்துச்சு?

கோபாலு:  அண்ணே! எவனோ ஒரு பயபுள்ள அவர் நம்பர யூஸ் பண்ணி வெளிநாட்டுக்கு சாட்டிலைட் மூலமா பேசியிருக்காங்க. ஏதோ தீவிரவாதிகள் சதி செய்ததா மொத என்குயரி ல கண்டுபிடிச்சிருக்காங்க.

தனபாலு: சரிடா... யாருன்னு கண்டுபிடிச்சா சரி... சினி நியூஸ் இருந்தா சொல்லு.

கோபாலு: அண்ணே! இவ்வளவு நேரம் நீங்க பொறுமையா இருந்ததே பெரிய விஷயம். தமண்ணா  முத்த மேட்டர் இருக்கு கேளுங்க....

தனபாலு: டேய் சொல்லுடா...சொல்லுடா...

கோபாலு: அண்ணே! அம்மணிக்கு தமிழ் சினி பீல்டு கொஞ்சம் டவுன் ஆயிருச்சு. அதனால் தெலுங்கு தேசம் போயிருக்காங்க, அங்க ஜூனியர் என் டி ஆர் கூட ஒரு லிப் முத்த காட்சியில நடிக்க சுமார் ஒண்ணேகால் கோடி சம்பளமா கேட்டிருக்காங்க.

தனபாலு: ஆமாண்டா, தமண்ணா லிப்புக்கு கோடி ரூபா கொஞ்சம் ஓவரு தாண்டா. நம்ம ஹன்சிகாவுக்கு வேணா கோடி கொடுக்கலாம்டா... நம்ம ஹன்சிகா ..

கோபாலு: அண்ணே! வழியாதிங்க, ஜொள்ள கொஞ்சம் தொடச்சிக்குங்க.

தனபாலு: சரிடா தம்பி... ஹன்சிகா பேர சொன்னதும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன். டேய்... நம்ம கஞ்சா கருப்பு ஒரு படத்துல ஹீரோவா நடிக்ராராம். அதுவும் மீனவ வேசத்தில. படம் பேரு மன்னார் வளைகுடா, அந்த படத்தோட டைரக்டர் கஞ்சா கருப்பு தான் ஹீரோவா வேணும்னு அடம்பிடிச்சு கேட்டிருக்காரு. ம்ஹும்... தயாரிப்பாளர் என்ன சொல்றதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருக்காரு.

கோபாலு: அண்ணே! அசின் மேட்டர் ஒண்ணு இருக்கு, சொல்லவா?

தனபாலு: டேய் சொல்லுடா... அசினுக்கு நான் ஒரு காலத்துல நான் பிசின் மாதிரி இருந்தேன் சொல்லுடா....

கோபாலு: அம்மணி இந்த வெய்ய காலத்துக்கு வெளிநாட்டுக்கு சுற்றுலா போகாம கேரளாவுல டென்ட் போட்டிருக்காங்க. அங்க அவங்களுக்கு ஒரு படகு வீடு இருக்காம். அங்க அசின் தன்னோட பிரண்ட்ஸ்களோட பல நாட்டு மீன்களை வறுத்து வறுத்து சாப்பிட்டிட்டு இருக்காங்களாம்.

தனபாலு: பிரண்ட்ஸ்ன்னா கேர்ள் பிரண்டா, இல்லை பாய் பிரண்டா?

கோபாலு: உங்களுக்கு எப்பவுமே சந்தேகம் தான்...கேர்ள் பிரண்ட்ஸ் மட்டும் தான். ரொம்ப தான் கவலைப்படுறிங்க.

தனபாலு: சரி விடுடா... நம்ம இடையழகி ஸ்ரேயா சகுனி கூட டூயட் பாட போறாங்க. கொடுத்து வச்ச சகுனிடா....

கோபாலு: அண்ணே! சகுனினா யாருண்ணே. புரியற மாதிரி சொல்லுங்க.

தனபாலு: அட சகுனி வேற யாருமில்ல... நம்ம பருத்திவீரன் கார்த்தி தான். புதுசா சகுனி ன்னு பேர் வச்ச படத்துல ஸ்ரேயா கூட ஜோடி போடுறார்.

கோபாலு: கார்த்திக்கு ஒவ்வொரு படத்திலயும் செம பிகரா மாட்டுதேண்ணே, கொடுத்து வச்ச மகராசன் தான். அண்ணே...?அண்ணே...? அண்ணே...?அண்ண்ண்ணேணே.....ண்ண்....ணே...?

தனபாலு: டேய் கோவாலு...என்னடா ஆச்சு? ஏண்டா முகம் கோணலா போகுது. வாய் குளறுது. டேய்..டேய்...தம்பி...டேய்...??

கோபாலு: அண்ணே! உங்களுக்கு சனி வந்திருச்சு. உங்க பின்னாடி திரும்பி பாருங்க.... அக்கா கோவமா நிக்கறாங்க.

தனபாலு: அக்காவா.... உனக்கு தான் அக்காவே இல்லையே, யாருடா புதுசா?

கோபாலு: அண்ணே! நான் அக்கான்னு சொன்னது உங்க பொண்டாட்டிய... அண்ணே! நான் எஸ்கேப் ஆயிடுறேன்... நீங்க எப்படியோ சமாளிச்சுக்கங்க.

தனபாலு: அய்யோ...எம் பொண்டாட்டியா. டேய் மவனே உன்கிட்ட பேசிட்டே அவ கடையில அரிசி வாங்கிட்டு வர சொன்னதையே மறந்துட்டேனே.... அடப்பாவி உன்னால நான் திட்டு வாங்க போறேனே... டேய் எஸ்கேப் ஆகாதடா... நீயும் எங்கூட சேர்ந்து திட்டு வாங்குடா..... 

வெள்ளி, 27 மே, 2011

அப்புறம் ரூம் போட்டு அழுதுடுவேன் . ரூமுக்கு செலவு யார் பன்றது ??? .

என்னமோ 

"இந்திய சுதந்திரதிர்க்காகவோ" , 

"தமிழ் நாட்டின் மின்வெட்டை கண்டித்தோ" , 

"ரஜினிக்கு உடம்பு சரியில்லாமல் போனதற்கு மிஸ்டர் கடவுளுக்கு


 எதிர்ப்பு தெரிவித்தோ" 

"இல்லை அட்லீஸ்ட் எனக்கு அக்கவுன்ட்டில் "டீ" தர மறுக்கும்


 கடைக்காரனுக்கு கண்டனம் தெரிவித்தோ" 

சிறைக்கு சென்றது மாதிரி இந்த பத்திரிக்கையும் அதைவிட நம் பதிவர்கள்


                                           
                                                      
 செய்யும் அட்டகாசம் தாங்க முடியலைங்க .

ஒரு லச்சத்து எழுபத்தி ஐந்தாயிரம் கோடி ரூபாய் (சாரிங்க எண்கள்ள


 எழுதினா எத்தின சைபர் போடுறதுன்னு தெரியல , அதான் எழுத்தால)

 கோடி ஊழல் பண்ணியதற்காக ஒரே ஒரு கனிமொழியை ஒரே ஒரு

 தடவை அரஸ்ட் பன்னிருக்காங்க, அந்த விசயத்த ஒரு மனிசன் எத்தின

 தடவதான் சார் படிக்கிறது ???? எங்க போனாலும் 

கனிமொழி ,கனிமொழி ,கனிமொழி........................

என்ன கொடுமை சார் இது ??? 

ஆளாளுக்கு பதிவு போட்டு .............. 

முடியல...........................

வேணாம் ..... அப்புறம் ரூம் போட்டு அழுதுடுவேன் . ரூமுக்கு செலவு யார்


 பன்றது ??? . அதுனால மரியாதையா இதோட முடிச்சுக்கங்க

இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா ? "

ரசித்ததும் புசித்ததும்

" இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா ?

இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா ? "

                                                             
                                                              
மனநல மருத்துவர் ஒருவர் தனது நண்பரைப் பார்ப்பதற்கு அவருடைய

 வீட்டிற்குப் போகிறார். அங்கு அவரது தாயைச் சந்திக்கிறார். குசலம்

 விசாரிக்கிறார்.
 
" என்னம்மா, சௌக்கியமா இருக்கீங்களா ? மூத்த பொண்ணு வீட்டுக்குப்

 போயிட்டு வந்தீங்களாமே ? மக சவுக்கியமா இருக்காங்களா ? மருமகன்

 எப்படி இருக்காரு ? " 

" எம் மக ரொம்ப சந்தோஷமா இருக்கா தம்பி. மருமகனுக்குத் தங்கமான

 குணம். எம் பொண்ணு துணி துவைச்சா அவரு கொடியில காயப்

 போடுறாரு. சாயங்காலம் இவ காஞ்ச துணிய எடுத்தா அவரு சுத்தமா

 மடிச்சு அலமாரில வெச்சுடறாரு. இவ பாத்திரம் தேச்ச உடனேயே அவரு

 துணியால துடைச்சு வெக்கிராறு. ஞாயித்துக் கிழமை சமையல்ல பாதி

 அவருதான்....என் மகா ரொம்ப கொடுத்து வச்சவ, தம்பி "

ஆறு மாதம் கழிகிறது. அந்த மருத்துவர் அதே நண்பர் வீட்டிற்குப்

 போகிறார். அந்தத் தாயிடம் உரையாடுகிறார். 

" என்னமா... என்னிக்கு ஊரிலேந்து வந்தீங்க ?... ரெண்டாவது மகன்

 வீட்டுக்குப் போனதா இவன் சொன்னானே. மகன் மருமகள் எல்லோரும் சவுக்கியமா ? "

" என்னத்த சொல்லுவேன் தம்பி...மருமக துணி துவைச்ச உடனேயே

 கொடியில காயப் போட இவன் பக்கத்துலேயே பம்மிகிட்டு நிக்கிறான்.

 அவ காஞ்ச துணிய எடுகறப்ப ஓடிப் போயி வாங்கி மடிச்சு அலமாரில

 வெக்கிறான். அவ பாத்திரம் தேச்சா இந்தப் பாவி "ஈ"ன்னு இளிச்சுகிட்டு

 அதைத் தொடச்சி வெக்கிறான். ஞாயித்துக் கிழமை ஆனா போதும்...

 கரண்டிய இவன் புடிச்சுகிட்டு " நீ நகரும்மா நா சமைக்கிறேன்" ன்னு

 கொஞ்சறான்... என்ன சொக்குப் பொடி போட்டாளோ தெரியலையே " 

இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியும் போலிருக்கிறதே !!!!

இவன் ரொம்ப நல்லவன்"னு சொல்லிட்டாருமா,.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்,...

                                                 
நாம்பாட்டுக்கு காயாக்காட்டுல செவனேன்னு பெஞ்சுல உக்காந்திருந்தேன்.

 திடீர்னு ஒரு மெனேஜர் மெயில் பண்ணி, மச்சி ஒரு Project இருக்கு

சேந்துக்கிருயானு கேட்டான். நானும் சரின்னு சொன்னது வம்பா போச்சு. அவன்

 பெங்களுர்ல ஒருத்தவனுக்கு போனப்போட்டு இங்க ஒருத்தன் சிக்கியிருக்காண்டா வாடா

 சொன்னான். அதுக்கு அவன் சொன்னான், அவன இங்க அனுப்புடா நான் பாத்துக்கறேன்னு.

 ஒரு ஏசி பஸ்ல ஏத்தி என்ன பொங்களூருக்கு அனுப்பினாங்க. நானும் வெயில் காலத்துல

 குளுகுளூன்னு இருக்குமேன்னு நம்ம்ம்பி பெங்களூருக்கு வந்துட்டேன். இங்க டீம்ல ஒரு 20

 பேரும்மா, எல்லாப் பயலுகளும் முச்சுத் தெணற தெணற வேலை செய்யறானுங்க..

 OUTLOOKகும் ORKUTடும் மட்டுமே பார்த்த எனக்கு இது புதுசா இருக்கு..என்னோட மெனேஜர்

 வேற அவரால எவ்வளவு முடியுமோ அவ்வளவு யும் எங்கிட்டத் தள்ளீ விட்டாரு, நானும்

 எவ்வளவு நேரம் தான் எழுதற மாதிரியே நடிக்கிறது?

(உங்களால் முடீயலன்னா தெரியதுன்னு சொல்லிட வேண்டியதுதான?)

நான் எப்பவும் வேலை செய்யாம மெயில் பண்ணிட்டே இருக்கிறத பார்த்துட்டு என்னோட

 மெனேஜர் "எவ்வளவு வேலை கொடுத்தாலும் இவன் மெயில் பண்ணீட்டே இருக்கான்,

 இவன் ரொம்ப நல்லவன்"னு சொல்லிட்டாருமா,

.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்,...

வியாழன், 26 மே, 2011

எங்க ஊர் எழுத்தாளர் -ப. ராமகிருஷ்ணன், காயக்காடு.


ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா

எங்க ஊர் எழுத்தாளர்
. ராமகிருஷ்ணன்


எனக்கு நன்கு தெரிந்த ஒரு நண்பர் நான் சிறு வயதில் என்னை ஒரு புத்தக புழுவாக மாற்றியவர் இவரிடம்அணைத்து வகையான புத்தகமும் இருக்கும் எனக்கு சிறு வயதில் சாதாரண குடும்பத்தில் பிறந்த எனக்கு இதுபோல் புக்குகள் வாங்க முடியாது அந்த காலகட்டத்தில் எனக்கு அவருடைய அணைத்து வகையான புத்தகம் இலவசமாக எனக்கு கிடைக்கு.இவரும் எவ்வளோவோ கதை கட்டுரை கவிதை காமெடி என பலவிதமான படைப்புகளை வெளியுட்டுள்ளர் எங்கள் ஊரில் முதல் முதலில் இவ்வாறான திறமைகள் வெளிக்காட்டி கொண்டவர் இவர் இந்த பெருமையும் இவரை சாரும்.இனியும் நீங்கள் தளராமல் உங்கள் படைப்புகள் அனைத்தையும் வெளியுடுமாறு கேட்டுகொள்கிறேன்

* தர்மம் ஏன் கர்ணனைக் காக்கவில்லை? சகுனம் பார்க்கலாமா, கூடாதா? ஏழை களையே கடவுள் அதிகம் சோதனைக் குள்ளாக்குவது ஏன்? எந்த விரதம் வலிலிமை வாய்ந்தது? மனிதன் கடவுளின் பொம்மை தானே?

-ப. ராமகிருஷ்ணன், காயக்காடு.

உயர்ந்த சர்க்கரைப் பொங்கலாய் இருந்தால் கூட அடுத்தவர் சாப்பிட்ட தட்டில் வைத்துக் கொடுத்தால் நாம் அதை உண்ண மாட்டோம். நல்லவர்களாய் இருந்தால்கூட- நல்ல செயலைச் செய்தால்கூட அதர்மத்தின் பக்கம் நின்றால் மரணம்தான் பரிசு. கர்ணன் தானம் செய்தது உயர்ந்ததாய் இருந்தாலும்கூட, அவன் அதர்மத் தின் சொரூபமான துரியோதனின் பக்கத்தில் இருந்ததால் தர்மம் அவனைக் காக்கவில்லை.

சகுனம் கட்டாயம் பார்க்க வேண்டும். ஆனால் நாம் வீட்டில் வளர்க்கும் பூனை நமக்கு குறுக்கே வரும்போது சகுனம் பார்ப்பது மூடத் தனமாகும். இதய வலிலி என்று அவசரமாக மருத்துவமனை செல்லவேண்டி இருக்கையில், பிரசவ காலத்தில் சகுனம் பார்த்துக் கொண்டி ருப்பது மூடத்தனமாகும். ஒரு நல்ல செயலை நிறுத்தி நிதானமாகச் செய்யும்போது சகுனம் பார்க்கலாம். அவசர காலத்தில் சகுனம் பார்ப்பது தவறு.

ஏழைகளை மட்டும் கடவுள் அதிகம் சோதனைக்குள்ளாக்குவார் என்று எண்ண வேண்டாம். பணம் உள்ளவர்களுக்கும் வசதி உள்ளவர்களுக்கும் வியாதி வருகிறது; வழக்கு வருகிறது; பிரிவு வருகிறது. கடவுள் எல்லாருக் கும் சோதனையைக் கொடுக்கத்தான் செய்கிறார். பலருக்கு வெளியே தெரிவதில்லை. சிலருக்கு வெளியே தெரிகிறது.

ஏகாதசி விரதம் உயர்ந்ததாகச் சொல்லப் பட்டுள்ளது. கடவுள் எந்தக் காலத்திலும் மனிதனை பொம்மையாகப் படைக்கவுமில்லை; இருக்கச் சொல்லவுமில்லை. நாமே அப்படி ஒரு பொய்யான தோற்றத்தில் நினைத்துக் கொள்கிறோம். இறைவன் இருக்குமிடம் மனிதனின் மனமாகும்

லைசென்ஸா..? அப்படின்னா..?


ஒரு சர்தார் வெளிநாட்டுக் கார் வாங்கினார். அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது
அவருக்கு தெரியாது. ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று.
முன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே அதிர்ச்சி.
அப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு சர்தார் மாதவ் சிங் வந்தார்.
விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்னார்..

கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..!

--------------------------------------------------


--------------------------------------------------

-------------------------

நம்ம சர்தார் நெடுஞ்சாலையில் வேகமா கார் ஓட்டிட்டு போனாரு. போலிஸ்
புடிச்சுருச்சு. போலீஸும் சர்தார் தான்.

எங்கே லைசென்ஸ்..? எடு பார்ப்போம்..

லைசென்ஸா..? அப்படின்னா..?

அட.. சின்னதா நாலு மூலையா இருக்கும்.. உன் படம் கூட இருக்குமே..

ஓ.. அதுவா..? ( சர்தார் பர்ஸ் எடுத்து சின்ன முகம் பார்க்கும் கண்ணாடியை
எடுத்து நீட்ட.. )

அட.. நீயும் போலீஸ் தானா..? இது தெரிஞ்சிருந்தா நிறுத்தியிருக்க மாட்டேனே..
முதல்லயே சொல்லப்படாதா..?

--------------------------------------------------

--------------------------------------------------

------------------------------------------

நம்ம சர்தார் ஆபீஸில் இருந்து வரும்போது ஒரு சிறுவன் தன் தொப்பியை ஸ்டைலாக
திருப்பிப் போட்டிருப்பதைப் பார்த்தார். இவருக்குதான் எல்லாவற்றையும் தானும்
செய்யவேண்டும் என்ற ஆவல் ஆயிற்றே.. தன்னுடைய தலைப்பாகையையும் திருப்பி வைத்துக்
கொண்டார். வீட்டு அருகில் வரும்போது பக்கத்து வீட்டு சர்தார் கேட்டார்..

ஓயே.. ஆபீஸுக்கு போய்க்கிட்டு இருக்கியா? வந்துக்கிட்டு இருக்கியா..?

--------------------------------------------------

--------------------------------------------------

------------------------

நம்ம சர்தார் அவருடைய நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தார். பேசிக்
கொண்டிருந்துவிட்டு விடை பெறும் நேரம் கடும் மழை பிடித்துக் கொண்டது. நண்பர்
சொன்னார்.. மழை பெய்யறதப் பாத்தா இப்போதைக்கு நிக்காது போலருக்கு சிங்கு.
அதனாலே தங்கிட்டு காலேல போ..

சர்தாரும் ஒப்புக்கொண்டார். சற்று நேரத்தில் சர்தார் திடீரென மழையில் நனைந்து
கொண்டே தெருவில் இறங்கி ஓடினார்..கொஞ்ச நேரத்தில் தொப்பலாக நனைந்து கொண்டே
திரும்பினார்..

நண்பர் கேட்டார்.." எங்கே சிங்கு நனைஞ்சுக்கிட்டே ஓடினே..?'

சர்தார் சொன்னார்.. " எப்படியும் இங்கே தங்குறதுன்னு முடிவாயிருச்சி.. அதான்
என் வீட்டுக்குப் போய் சொல்லிட்டு வந்தேன்.. ராத்திரிக்கு வரமாட்டேன்னு...!

--------------------------------------------------

--------------------------------------------------

-----------------------------------------

ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல
எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது.. ஒரு நாள் மூத்த
மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே
தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.

மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது..
அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது.. " மாமியாரின் அன்புப்
பரிசு.."

ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார்
வென்றார்.." மாமியாரின் அன்புப் பரிசாக..".

மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி வரை காப்பாத்தவே
இல்ல.. மாமியார் கடைசியா பரிதாபமா 'லுக்கு' உட்டப்ப சொன்னான்.. "போய்த் தொலை..
எனக்கு கார் வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்..பொண்ணா வளர்த்து
வச்சிருக்க..?" மாமியார் செத்துட்டுது..

மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் பாரின் கார் நின்னுச்சு.."
மாமனாரின் அன்புப் பரிசு" என்ற அட்டையோட...!

அதிசய டாக்டர்...........


ஒரு ஊர்ல ஒரு சர்தார் நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு
இருந்தார்.. அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு..
எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க
ஆரம்பிச்சுட்டாரு.. சர்தாருக்கு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப்
பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!

ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி " டாக்டர்
அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது.." அப்படின்னாரு..
எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர்
ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.

அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.. அப்புறம்
உதவியாள்கிட்டே " யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு" ன்னாரு.. அதில இருந்த
லேகியத்தை நிறையா வழிச்சு சர்தார் வாய்க்குள்ள அப்புனாரு..

சர்தார் கொஞ்சம் தின்னு பாத்துட்டு, "தூ... தூ... இது எருமை சாணி.." அப்படின்னு
கோபமா கத்தினாரு.. உடனே அதிசய டாக்டர்.. " அட.. உங்களுக்கு ருசி தெரிய
ஆரம்பிச்சுருச்சி" ன்னாரு..!

சர்தார் அதிசய் டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே
திரும்பிட்டாரு.. இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே..
மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு..

அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி " டாக்டர்.. எனக்கு பழசெல்லாம்
மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது.." அப்படின்னாரு.. இப்ப
அதிசய டாக்டருக்கு குழப்பம்.. என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்..
என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு.. சர்தாருக்கு
மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு..

திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட.." அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடு"
ன்னாரு.. அப்ப கெளம்பி ஓடுனவர்தான் இந்த சர்தார்.. எங்க போனாருன்னு இன்னமும்
தெரியலே...!!